Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் மார்க்கங்களில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகள்

ரயில் மார்க்கங்களில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகள்

By: Nagaraj Thu, 01 Oct 2020 8:06:08 PM

ரயில் மார்க்கங்களில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகள்

நிரந்தர வீடுகள் பெற்றுக் கொடுக்க தீர்மானம்... ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் மார்க்கத்தின் இரு மருங்கிலும் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மருதானை தொடக்கம் பாதுக்க வரை வசிக்கும் ஆயிரத்து 630 குடும்பங்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கொழும்பு நெரிசல்மிகு ரயில் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாலித சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ministry of environment,permanent housing,resolution,representatives ,சுற்றுச்சூழல் அமைச்சகம், நிரந்தர வீடு, தீர்மானம், பிரதிநிதிகள்

இதேவேளை, களனி ஆற்றின் இருபுறமும் சுமார் 4 ஆயிரம் தொழிற் சாலைகள் அனுமதி பெறாமல் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமர வீர உட்பட அமைச்சகத்தின் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடலின்போது இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :