Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அர்ஜென்டினா அரசு அனுமதி

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அர்ஜென்டினா அரசு அனுமதி

By: Karunakaran Thu, 31 Dec 2020 11:04:53 AM

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அர்ஜென்டினா அரசு அனுமதி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 70 சதவிகித செயல் திறன் கொண்டுள்ளது. ஆனால், தடுப்பூசியின் முதல் டோஸ் பாதி அளவிலும் இரண்டாவது டோஸ் முழு அளவிலும் செலுத்தப்படும்பது 90 சதவிகித செயல்திறனுடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சாதாரண குளர்சாதன பெட்டி சீதோஷ்ண நிலையில் வைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அரசு நேற்று அனுமதியளித்தது. இதன் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது.

permission,argentina,oxford vaccine,corona virus ,அனுமதி, அர்ஜென்டினா, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, கொரோனா வைரஸ்

இங்கிலாந்தை தொடர்ந்து மற்றநாடுகளும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த இரண்டாவது நாடாக அர்ஜென்டினா இணைந்துள்ளது.

4 கோடியே 40 லட்சம் பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்டுள்ள அர்ஜென்டினாவில் 16 லட்சம் பெருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :