Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்ற டெரிக் ஓ பிரையனையும் கீழே தள்ளிவிட்ட போலீஸ்

ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்ற டெரிக் ஓ பிரையனையும் கீழே தள்ளிவிட்ட போலீஸ்

By: Karunakaran Fri, 02 Oct 2020 6:29:48 PM

ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்ற டெரிக் ஓ பிரையனையும் கீழே தள்ளிவிட்ட போலீஸ்

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19வயது பெண், உயர் வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டனர். அப்போது போலீசார் தடுக்க முயற்சி செய்தபோது ராகுல் காந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

police,knocked down,derrick o brien,hadras district ,பொலிஸ், தள்ளிவிடுதல் , டெரிக் ஓ பிரையன், ஹட்ராஸ் மாவட்டம்

ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றனர்.

அப்போது, அவர்களை ஹத்ராஸ் மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். டெரிக் ஓ பிரையன் தடையை மீறி நடந்து சென்றபோது அவரை போலீசார் பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் எம்பி ககோலி கோஷ் தாஸ்திடார் தனது ட்விட்டர் பக்கத்தில், டெரிக் ஓ பிரையன் தரையில் தள்ளிவிட்டதில் அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


Tags :
|