Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு

தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு

By: Monisha Mon, 21 Dec 2020 3:21:19 PM

தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. வெல்லம், பச்சரிசி, கரும்பு, திராட்சை, ஏலக்காய் போன்றவை இதில் அடங்கும். இந்த பொங்கல் தொகுப்புடன் கடந்த ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த வருடம் ரூ.2,500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் ரே‌ஷன் கடைகள் மூலம் இவை வினியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் சர்க்கரை பெறும் 5 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போவதை கருத்தில் கொண்டு, சர்க்கரை பெறக்கூடிய அட்டைதாரர்கள் அதனை அரிசி கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வரை 1.7 லட்சம் பேர் அரிசி கார்டுகளாக மாற்றம் செய்துள்ளனர். ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து அதனை நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளனர். அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கு நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதுவரையில் 2 லட்சம் பேர் சர்க்கரை கார்டுகளில் இருந்து அரிசி கார்டுக்கு மாறி இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

pongal festival,gallery,family card,online,token ,பொங்கல் பண்டிகை,தொகுப்பு,குடும்ப அட்டை,ஆன்லைன்,டோக்கன்

இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பொங்கல் தொகுப்பு ரே‌ஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வீடுகளுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட உள்ளது. எந்த தேதியில் இருந்து இந்த பணி தொடங்கும் என்று அரசு ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்கள் வருவதால் அதனை கருத்தில் கொண்டு விரைவாக டோக்கன் வினியோகம் செய்யப்படும்.

ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு பொங்கல் பரிசு வழங்குவது என்ற விவரமும் அறிவிக்கப்படும். ரே‌ஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு டோக்கன் விரைவில் வழங்கப்பட உள்ளது. எந்த நாளில், நேரத்தில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வது என்ற விவரம் அப்போது தெரிவிக்கப்படும். கூட்டம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசை வாங்கி செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சர்க்கரை கார்டுகளில் இருந்து அரிசி கார்டாக 2 லட்சம் பேர் மாற்றப்பட்டுள்ளனர். அதனுடன் 2 கோடியே 5 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags :
|