Advertisement

பாஜகவில் இன்று பிரபல நடிகை விஜயசாந்தி இணைகிறார்

By: Nagaraj Mon, 07 Dec 2020 08:15:33 AM

பாஜகவில் இன்று பிரபல நடிகை விஜயசாந்தி இணைகிறார்

விஜயசாந்தி இன்று பாஜகவில் நாளை இணைகிறார் என்று அக்கட்சியின் தலைவர் விவேக் வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். பிரபல தென்னிந்திய நடிகை குஷ்பு அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து பிரபல தென்னிந்திய நடிகை விஜயசாந்தியும் பா.ஜ.க.வில் விரைவில் இணைவார் எனத் தகவல் வெளியானது.

vijayashanti,bjp,today,joins,separate party ,விஜயசாந்தி, பாஜக, இன்று, இணைகிறார், தனிக்கட்சி


பின்னர் அதுகுறித்து எதுவும் பேசப்படவில்லை. இந்த நிலையில் விஜயசாந்தி தற்போது பாஜகவில் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து டில்லியில் பாஜக தலைவர் விவேக் வெங்கடசாமி கூறுகையில், விஜயசாந்தி இன்று முறைப்படி பாஜகவில் இணைவார். அவர் அமித்ஷாவை சந்தித்தார். கே.சி.ஆரால் ஓரங்கட்டப்பட்ட அனைவரும் பாஜகவில் சேருவார்கள் என்றார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு பாஜகவில்தான் நடிகை விஜயசாந்தி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். அப்போது அவருக்கு பாஜக மகளிா் செயலாளா் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|