Advertisement

வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலை உயர்வு

By: Monisha Tue, 03 Nov 2020 09:05:40 AM

வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலை உயர்வு

வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகவே புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தநிலையில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் ரகத்துக்கு ஏற்ப ஒரு கிலோ உருளைக்கிழங்கு சில்லரை விலையாக ரூ.30 முதல் ரூ.45 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் தங்களுடைய சமையலில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவற்றின் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலில் இருந்தும் உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுகிறது.

onions,potatoes,prices,market,general ,வெங்காயம்,உருளைக்கிழங்கு,விலை,மார்க்கெட்,பொதுமக்கள்

சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது 15 லாரிகளில் மட்டும் தான் உருளைக்கிழங்கு வருகிறது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.12, ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிடுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு மொத்த மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் உருளைக்கிழங்கு விலை கணிசமாக குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|
|