Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வரும் சக்தி வாய்ந்த ஹைசென் புயல்

தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வரும் சக்தி வாய்ந்த ஹைசென் புயல்

By: Karunakaran Mon, 07 Sept 2020 4:10:07 PM

தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வரும் சக்தி வாய்ந்த ஹைசென் புயல்

‘மேசக்‘ என்ற சக்தி வாய்ந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் இன்னும் மீண்டு வராத நிலையில், அங்கு ஹைசென் என்கிற சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை தாக்கியது. இதனால், அங்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்தப் புயல் கரையை ஜப்பான் கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புயலின் போது ஒகினாவா, ககோஷிமா, நாகசாகி மற்றும் குமாமோடோ ஆகிய மாகாணங்களின் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

powerful hurricane,heisen,south korea,japan ,சக்திவாய்ந்த சூறாவளி, ஹைசன், தென் கொரியா, ஜப்பான்

நெரிசலான பொது முகாம்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பெரும்பாலான மக்கள் புயல் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் இருக்கும் ஓட்டல்களில் தங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புயல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ரெயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமாமி ஓஷிமா தீவில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் மாயமான மாலுமிகளை தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இந்த புயல் ஏற்கனவே கணித்தபடி ஜப்பானில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் புயல் தென் கொரியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அந்தப் புயல் இன்று தென்கொரியாவை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரமான புசான் நோக்கி செல்வதாக அந்நாட்டின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
|