Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதாக ஜனாதிபதி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதாக ஜனாதிபதி அறிவிப்பு

By: Nagaraj Thu, 06 Aug 2020 10:33:10 PM

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதாக ஜனாதிபதி அறிவிப்பு

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான நாடாளுமன்றத்தை ஸ்தாபிப்பது பற்றிய நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.

மாத்தளை மாவட்டம் தேர்தல் முடிவுகள் படி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 33,927 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 18,272 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 1,757 வாக்குகளைப் பெற்றுள்ளது. எங்கள் மக்கள் சக்தி 1,327 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1,185 வாக்குகளைப் பெற்றுள்ளது.

pa,president,victory,announcement ,பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, வெற்றி, அறிவிப்பு

கொழும்பு மாவட்டம் கெஸ்பேவ தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 89,240 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 22,849 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 9,160 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2,098 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டம் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய மக்கள் சக்தி 16,521 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 6,294 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 1,143வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 1,074 வாக்குகளைப் பெற்றுள்ளது.

Tags :
|