Advertisement

ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்வு

By: Monisha Sat, 24 Oct 2020 1:44:03 PM

ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்வு

ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையாகியுள்ளது.

கரூர் ரெயில்வே ஜங்ஷன் ரோடு பகுதியில் கரூர் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு மாவட்டங்களின் பல இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர்.

மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்கள் ஏலத்திற்கு வருகிறது. இதனை மொத்த வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவரும் வந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். வழக்கம்போல நேற்றும் பூக்கள் ஏலம் விடப்பட்டது.

puja,jasmine,flowers,price,market ,பூஜை,மல்லிகை,பூக்கள்,விலை,மார்க்கெட்

நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை என்பதால், பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். ஆகவே, பூக்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. அந்தவகையில், ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.1,000-க்கும், முல்லை ரூ.800-க்கும், அரளி பூ ரூ.400-க்கும், ஜாதிப்பூ ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போனதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். அந்த பூக்களை சரமாக கட்டி விற்கும்போது அதன் விலை இன்னும் அதிகரிக்கும்.

ஆயுதபூஜைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் பூக்களின் விலை எகிறியதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags :
|
|