Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறிய முக்கிய தகவல்கள்!

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறிய முக்கிய தகவல்கள்!

By: Monisha Tue, 30 June 2020 5:17:08 PM

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறிய முக்கிய தகவல்கள்!

பிரதமர் மோடி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறிய முக்கிய குறிப்புகள் குறித்த விபரம் வருமாறு:-

ஊரடங்கின் போது, ​​விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டன. அதைப்போன்று தளர்வுகளின் போதும் ​​அரசாங்கங்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் குடிமக்கள் மீண்டும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் எங்களுக்கு சிறப்பு கவனம் உள்ளது. யாராவது விதிமுறைகளை மீறுவதை நீங்கள் கண்டால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

பிரதமர் கரீப் கல்யாண் அண்ணா யோஜனா நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும். அதற்காக ரூ.90 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படும்.

pm modi,speech,curfew,farmers,free food ,பிரதமர் மோடி,உரை,ஊரடங்கு,விவசாயிகள்,இலவச உணவு

நலத்திட்டத்தை வெற்றிகரமாக செய்வதற்கு பங்களித்த விவசாயிகள் மற்றும் நேர்மையான வரி செலுத்துவோருக்கு பாராட்டுகள். இன்று, ஏழைகளுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் இலவச உணவு தானியங்களை அரசாங்கம் வழங்குவதற்கு இரண்டு பிரிவுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலாவதாக, நம் நாட்டின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், இரண்டாவது, நேர்மையான வரி செலுத்துவோர். இவர்களுக்கு எனது இதயத்திலிருந்து நன்றி தெரிவித்து கொள்ளுகின்றேன்.

வேலை தேடி மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் ஏழைகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை நோக்கி நாடு நகர்ந்து செல்லுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

Tags :
|
|