Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லை பிரச்சினையில் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள பிரதமர் மோடி அக்கறை காட்டுகிறார் - ராகுல் காந்தி

எல்லை பிரச்சினையில் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள பிரதமர் மோடி அக்கறை காட்டுகிறார் - ராகுல் காந்தி

By: Karunakaran Fri, 24 July 2020 11:52:08 AM

எல்லை பிரச்சினையில் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள பிரதமர் மோடி அக்கறை காட்டுகிறார் - ராகுல் காந்தி

லடாக் எல்லை பகுதியில் கடந்த மாதம் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின் எல்லை பகுதியில் போர் மூளும் பதற்றம் நிலவியது. சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதுகுறித்து ஏற்கனவே 2 வீடியோக்களை வெளியிட்டிருந்தார். மேலும், பிரதமர் மோடி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். தற்போது மீண்டும் லடாக் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தி மூன்றாவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.

modi,rahul gandhi,ladakh border,influence ,மோடி, ராகுல் காந்தி, லடாக் எல்லை, செல்வாக்கு

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், சீனாவுடனான எல்லை பிரச்சினையை கையாளுவதில் இந்தியாவுக்கு சர்வதேச அளவிலான தொலைநோக்கு பார்வை தேவை. ஆனால் மத்திய அரசிடம் தேசிய அளவிலான தொலைநோக்கு பார்வையோ அல்லது சர்வதேச அளவிலான தொலைநோக்கு பார்வையோ இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தனது சொந்த செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில்தான் நூறு சதவீதம் அக்கறை காட்டுகிறார். ஆர்வமாக இருக்கிறார். இந்த பணியை செய்த முடிப்பதில்தான் அரசின் அனைத்து அமைப்புகளும் மும்முரமாக உள்ளன. பிரதமருக்கு கேள்விகளை எழுப்பும் பொறுப்பு எனக்கு இருப்பதால், அதை நான் செய்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
|