Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் தேஜஸ் ரயில் சேவைகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்

தனியார் தேஜஸ் ரயில் சேவைகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்

By: Nagaraj Thu, 08 Oct 2020 3:46:25 PM

தனியார் தேஜஸ் ரயில் சேவைகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் துவக்கம்

மீண்டும் தொடங்குகிறது... கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக லக்னெü- தில்லி, ஆமதாபாத்-மும்பை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் தேஜஸ் ரயில் சேவைகள் 7 மாதங்களுக்குப்பின் மீண்டும் அக்டோபர் 17-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

இந்த 2 ரயில்களிலும் ஒவ்வொரு மாற்று இருக்கையும் காலியாக வைக்கப்பட்டு, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். ரயில் பயணிகள் ரயிலில் நுழைவதற்கு முன் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இருக்கைகளை மாற்றி அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பயணிகளுக்கு "கொவிட்-19' பாதுகாப்பு பெட்டகம் ஒன்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு பெட்டகத்தில் கை சுத்திகரிப்பானும், ஒரு முகக் கவசமும், ஒரு ஜோடி கையுறையும் இருக்கும்.

சரக்குகள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலும், கழிவறை பகுதியிலும் சரியான இடைவெளி விட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படும். மேலும், பயணிகளின் பொருள்களைக் கொண்டு வரும் பைகளும் உரிய முறையில் கிருமி நீக்கம் செய்யப்படும். பயணிகளும், ஊழியர்களும் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம்.

re-operation,private tejas train,announcement,royal service ,மீண்டும் இயக்கம், தனியார் தேஜஸ் ரயில், அறிவிப்பு, ரயல்சேவை

அனைத்துப் பயணிகளும் தங்களது செல்லிடப்பேசியில் "ஆரோக்கிய சேது' செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இருக்கையை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இதுதொடர்பாக விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இரண்டு தனியார் ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றவுடன், ஐஆர்சிடிசி சார்பில் ரயில்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகளும், பராமரிப்பு பணிகளும் உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு தேஜஸ் ரயில்களும் பயணிகளுக்குத் தரமான சேவைகளை அளித்து வருவதன் மூலமாகவும், சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதன் மூலமாகவும் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ரயில்களைத் தாமதமாக இயக்கினால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், ரயில்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு சரியான நேரத்தில் இயக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. லக்னெü-தில்லி இடையிலான தனியார் தேஜஸ் விரைவு ரயில் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதியிலிருந்தும், ஆமதாபாத்-மும்பை இடையிலான தனியார் ரயில் சேவை இந்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதலும் தொடங்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வரும் அக்.17 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :