Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆடி மாதம் அமாவாசை சடங்குகளுக்கு அம்மா மண்டபம் வர தடை விதிப்பு

ஆடி மாதம் அமாவாசை சடங்குகளுக்கு அம்மா மண்டபம் வர தடை விதிப்பு

By: Nagaraj Sun, 19 July 2020 11:07:02 AM

ஆடி மாதம் அமாவாசை சடங்குகளுக்கு அம்மா மண்டபம் வர தடை விதிப்பு

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு வரத் தடை... கொரோனா பொது முடக்கம் காரணமாக ஆடி மாதத்தில் தர்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் தங்கள் முன்னோர் நினைவாக தை, ஆடி அமாவாசை நாள்களில் நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்த நாள்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரியாற்றில் பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

 ,கொரோனா, அம்மா மண்டபம், படித்துறை, பூஜைகள், தடை விதிப்பு

பொதுமுடக்கத்தால் இந்தாண்டு ஆடி அமாவாசையில் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் அளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி, திருச்சி மாநகரக் காவல்துறை, ஸ்ரீரங்கம் புரோகிதர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முழு முடக்க நாளான ஜூலை 19, ஆடி அமாவாசை நாளான திங்கள்கிழமை (ஜூலை 20), முழு முடக்க நாளான ஜூலை 26, ஆடி 18 ஆம் பெருக்கு நாளான ஆக. 2, ஆடி 28 ஆம் பெருக்கு நாளான ஆக. 12 ஆகிய நாள்களில் பொதுமக்கள் யாரும் அம்மா மண்டபத்துக்கு வர வேண்டாம்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நாள்களில் அம்மா மண்டப படித்துறையில் புரோகிதம் தொடர்பான பூஜைகள் நடைபெறாது. பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :