Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லெபனானில் வெடி விபத்தை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டம்

லெபனானில் வெடி விபத்தை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டம்

By: Karunakaran Mon, 10 Aug 2020 5:07:22 PM

லெபனானில் வெடி விபத்தை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியதால், அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து காரணமாக பெய்ரூட் நகரமே ஒட்டுமொத்தமாக தலைகீழாக புரண்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்து காரணமாக சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெய்ரூட் நகரில் உள்ள 75 சதவிகிதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் குலுங்கி, சேதமடைந்துள்ளன. கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் லெபனான் அரசு பொது மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. பலர் வீடுகளை இழந்து சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உணவின்றி பலர் தவித்து வருகின்றனர்.

protests,lebanon,government,beirut ,போராட்டம் , லெபனான், அரசு, பெய்ரூட்

இந்த வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது, அரசின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் பெய்ரூட்டில் உள்ள அமைச்சக கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் ஒரு பிரிவினர் பெய்ரூட்டில் உள்ள வங்கி சங்கத்தின் தலைமை கட்டிடத்தை தாக்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்துக்கு முன்பு போராட்டக்காரர்கள் திரண்டதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின், பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நேற்று இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்ததால், அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கப்பட்டு சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது பெய்ரூட் நகரம் கலவர பூமியாக மாறியுள்ளது.

Tags :