Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

By: Monisha Wed, 16 Sept 2020 3:18:53 PM

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டதிலிருந்து வர்த்தக ரீதியாகவும், படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாகவும் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நடுத்தர மக்களின் வசதிக்காக இங்கிருந்து சென்னைக்கு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நெல்லை வழியாக சென்னை சென்று வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்த ரெயில்களின் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வாக கடந்த 7-ந்தேதி முதல் திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி ரெயில் மட்டுமே இயக்கப்பட்டது. கடந்த 9-ந்தேதி முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த தினசரி ரெயில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்புவதால் நெல்லை வருவதற்குள் பெரும்பாலும் நிரம்பிவிடும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு பயணிகளே பெட்டிகளில் உட்கார அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் 60 சதவீத பயணிகளுடன் தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது.

nellai express,public,curfew,booking,train ,நெல்லை எக்ஸ்பிரஸ்,பொதுமக்கள்,ஊரடங்கு,முன்பதிவு,ரெயில்

முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று அரசு அறிவித்துள்ளதால் விரைவில் நிரம்பி விடுகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படாததால் விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு நடுத்தர மக்கள் அதிக செலவு செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மட்டுமே சென்னைக்கு இயக்கப்படுவதால் அதிகளவு பயணிகள் கூட்டம் இருக்கிறது. ஆனால் சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதால் பலருக்கு இடம் கிடைப்பதில்லை. சீக்கிரமாகவே முன்பதிவும் முடிந்து விடுகிறது.

எனவே ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் நெல்லை மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரசை இயக்கினால் இங்கிருந்து சென்னை செல்லும் பயணிகள் எந்தவித சிரமும் இன்றி செல்லலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|
|