Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க சர்வதேசத்திடம் ரட்ணஜீவன் வலியுறுத்தியதாக தகவல்

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க சர்வதேசத்திடம் ரட்ணஜீவன் வலியுறுத்தியதாக தகவல்

By: Nagaraj Fri, 11 Dec 2020 8:26:47 PM

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க சர்வதேசத்திடம் ரட்ணஜீவன் வலியுறுத்தியதாக தகவல்

இலங்கை மீது பொருளாதார தடை விதியுங்கள் என்று ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறும் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு சாட்சியங்கள் இருப்பதாகவும் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

sri lanka,embargo,sinhala website,action ,இலங்கை, பொருளாதார தடை, சிங்கள இணையதளம், நடவடிக்கை

தமிழ் மக்கள் தமது இறந்த உறவினர்களை நினைவுக் கூர தற்போதைய அரசாங்கம் இடமளிப்பதில்லை எனவும் ஜெனிவா யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய இலங்கை அரசாங்கம் இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற நிலையில் செயற்பட்டு வருவதாகவும் ஹூல் குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

Tags :