Advertisement

கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்கா மீண்டும் திறப்பு

By: Monisha Sun, 20 Dec 2020 2:42:17 PM

கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்கா மீண்டும் திறப்பு

திருவிதாங்கூர் மன்னரால் 1922-ம் ஆண்டு 31.24 ஏக்கர் பரப்பளவில் கன்னியாகுமரியில் பழத்தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. திருவிதாங்கூர் மகாராஜா கன்னியாகுமரிக்கு வரும்போது தங்கி ஓய்வெடுப்பதற்காகவும் சாப்பிடுவதற்கான பழங்கள் எடுப்பதற்காகவும் இந்த பழத்தோட்டம் அமைக்கப்பட்டது. இதில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ரூ.4 கோடிசெலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் செயற்கை அலங்கார நீரூற்று சிறுவர் விளையாட்டு பூங்கா, மூங்கில் பூங்கா, மூலிகைத்தோட்டம், பூந்தோட்டம் அலங்காரச் செடிகள், புல் தரைகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டு வந்தனர்.

kanyakumari,king,orchard,park,tourism ,கன்னியாகுமரி,மன்னர்,பழத்தோட்டம்,பூங்கா,சுற்றுலா

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் சுற்றுச்சூழல் பூங்கா மூடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவையும் திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா நேற்றுமுன்தினம் முதல் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.

Tags :
|
|