Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

By: Monisha Thu, 10 Dec 2020 2:19:18 PM

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை கொண்டாட பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ரயில் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகள் இன்னும் வினியோகிக்கப்படவில்லை.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எட்டு ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டன. மாலை மற்றும் இரவு நேரத்தில் செல்லக்கூடிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், மதுரை, செங்கோட்டை, திருச்சி, ராமேஸ்வரம் ரயில்கள் முழுவதும் நிரம்பி விட்டதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

vacation,train,transport,booking,passenger ,விடுமுறை,ரயில்,போக்குவரத்து,முன்பதிவு,பயணிகள்

அதேநேரத்தில் பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரயில்களின் இருக்கைகள் காலியாக உள்ளன. முற்றிலும் ஏ.சி. வசதி உள்ள ரயிலிலும்(தேஜஸ்) இடங்கள் உள்ளன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- தீபாவளி பண்டிகைக்கு விடப்பட்ட ரயில்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. அதாவது அக்டோபர் இறுதிவரை இயக்கப்பட்ட ரயில்களில் சராசரியாக 57 சதவீதம் இடங்கள் நிரம்பின.

சிறப்பு ரயில்களில் 74 சதவீத இடங்கள் நிரம்பின. 100 சதவீதம் இடங்கள் நிரம்பி ரயில்கள் இயக்கப்பட்டன. தீபாவளியை விட பொங்கல் பண்டிகைக்கு அதிக அளவு மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தேவைக்கு ஏற்ப ரயில்களை இயக்க தயாராக இருக்கிறோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற விசே‌ஷ நாட்கள் வருவதால் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்களை இயக்க தயாராக உள்ளோம். சென்னையில் இருந்து குறிப்பிட்ட சில ரயில்களுக்கு மட்டுமே தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் பெரும்பாலும் இடங்கள் நிரம்பி விடுகிறது என அவர்கள் கூறினர்.

Tags :
|