Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்தியர்களை தரக்குறைவாக பேசிய ரிச்சர்ட் நிக்சன்

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்தியர்களை தரக்குறைவாக பேசிய ரிச்சர்ட் நிக்சன்

By: Karunakaran Sun, 06 Sept 2020 11:03:44 AM

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்தியர்களை தரக்குறைவாக பேசிய ரிச்சர்ட் நிக்சன்

அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை ரிச்சர்ட் நிக்சன் ஜனாதிபதியாக பதவி வகித்தார். தற்போது, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆடியோ பதிவு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1971-ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகையின் அலுவலகத்தில் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.

அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்சிங்கர், வெள்ளை மாளிகையின் தலைவர் எச்.ஆர். ஹால்டேமன் ஆகியோரும், 1971-ம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகையின் அலுவலகத்தில் நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

richard nixon,indians,president,united states ,ரிச்சர்ட் நிக்சன், இந்தியர்கள், ஜனாதிபதி, அமெரிக்கா

இந்திய பெண்கள் குறித்து ஆபாசமாகவும், இனரீதியாக இந்தியர்களை அவமதிக்கும் வகையிலும் ரிச்சர்ட் நிக்சன் அதில் கூறியுள்ளார். மேலும், உடல் ரீதியாகவும் இந்தியர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியர்களை குற்றம் சாட்டியும் ரிச்சர்ட் நிக்சன் பேசியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அவர் இந்தியர்கள் மீது எந்த அளவுக்கு வெறுப்பு வைத்திருந்தார் என்பதை இந்த ஆடியோ பதிவு வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :