Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்டிகை நெருங்கி வருவதால் மதுரையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

பண்டிகை நெருங்கி வருவதால் மதுரையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

By: Monisha Tue, 27 Oct 2020 09:51:28 AM

பண்டிகை நெருங்கி வருவதால் மதுரையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

மதுரையில் தற்போது தினமும் 100-க்கும் குறைவான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மீண்டும் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். இந்நிலையில் மதுரையில் மீண்டும் கொரோனா அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற சின்ன சின்ன விதிமுறைகளை கடைபிடித்தால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

festival,corona virus,madurai,face mask,social space ,பண்டிகை,கொரோனா வைரஸ்,மதுரை,முக கவசம்,சமூக இடைவெளி

தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துணி, மணி பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்க வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிறு உள்ளிட்ட அலுவலக விடுமுறை நாட்களில் கூட்டம், கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மீண்டும் அதிகரிக்கும்.

கொரோனா அதிகரித்தால் பொதுமக்களை காட்டிலும் அது அதிகாரிகளுக்கு தான் கூடுதல் பிரச்சினை. எனவே பொதுமக்கள், அரசு அறிவுறுத்தும் அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :