Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளிக்கு சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்ததால் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

தீபாவளிக்கு சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்ததால் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

By: Karunakaran Mon, 16 Nov 2020 6:18:07 PM

தீபாவளிக்கு சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்ததால் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்றபோது நம் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தபோது சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று உந்துதலை பொதுமக்களிடம் ஏற்படுத்தியது. இதன் தாக்கம் தீபாவளி பண்டிகை காலத்தில் எதிரொலித்தது.

நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதேசமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளுக்காக, 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களாக எடுத்து தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

revenue,chinese products,diwali,india ,வருவாய், சீன தயாரிப்புகள், தீபாவளி, இந்தியா

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, சீன பொருட்கள் புறக்கணிப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை காலத்தில் 20 விநியோக நகரங்களில், நுகர்வோர் சாதனங்கள், தங்க நகைகள், காலணிகள் என அனைத்து விதமான பொருட்களும் சுமார் மொத்தம் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. சீன பொருட்களை மக்களும், வர்த்தகர்களும் புறக்கணித்ததால் சீன பொருட்கள் விற்பனை அடியோடு முடங்கியது.

இதனால் சீனாவுக்கு இந்த பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தகர்களும், பொதுமக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சி.ஏ.ஐ.டி. ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|