Advertisement

நீலகிரியில் ரூ.584 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை

By: Nagaraj Sun, 25 Oct 2020 8:44:01 PM

நீலகிரியில் ரூ.584 கோடிக்கு தேயிலைத் தூள் விற்பனை

ரூ.584 கோடிக்கு விற்பனை... நீலகிரி மாவட்டம் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு 9 மாதங்களில் மட்டும் ரூ 584.43 கோடிக்கு தேயிலை தூள் விற்பனையாகியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில்தான் தென் இந்தியாவில் அதிகளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் 63 ஆயிரம் சிறுகுறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இதேபோல் 110 சிறிய தேயிலை தொழிற்சாலைகளும். 20 அரசு கூட்டுறவு தொழில் சாலைகளும். மேலும் 35 தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது குஜராத், மகராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாகவும், அங்கு கனமழை பெய்ததாலும் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்து போனது. இதனால் தென் மாநிலங்களுக்கு தேயிலை வர்த்தகர்கள் வருகை தந்து, நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலையை வாங்கிச் செல்கின்றனர்.

income,tea,sales,9 months,nilgiris ,வருமானம், தேயிலை, விற்பனை, 9 மாதங்கள், நீலகிரி

இது தொடர்பாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறுகையில், இங்கு கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை 9 மாதங்களில் மட்டும் 39 ஏலம் நடத்தப்பட்டது. அதில், இதில் 4 கோடியே 72 கிலோ தேயிலை தூள் ஏலம் போனது. இதன்மூலம் 584 கோடியே 43 லட்சம் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இது பல மடங்கு அதிகம்.

இதனால் குன்னூர் தேயிலை மையத்தில் மொத்த வருமானம் 178 கோடியே 66 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 44.0.3% சத விதமாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடிக்குமானால் தேயிலை வர்த்தகர்களுடைய மொத்த வருமானம் கணிசமாக உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags :
|
|
|