Advertisement

ஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல்

By: Monisha Sun, 29 Nov 2020 5:12:01 PM

ஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பணம் வைத்து விளையாடப்படும் 'ஆன்லைன் ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றுக்கு உரிய திருத்தங்கள் செய்து ஒரு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

online,rummy,game,computer,penalty ,ஆன்லைன்,ரம்மி,விளையாட்டு,கணினி,அபராதம்

எனவே, திருச்சி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் 'ஆன்லைன் ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுபவரும், அதை நடத்துவோரும், மேற்குறிப்பிட்ட அவசரச் சட்டப்படி உரிய அபராதத்திற்கும் சிறை தண்டனைக்கும் ஆளாக்கப்படுவதோடு, இவ்விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் கணினிகளும் மற்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் இணைய வழி பணப்பரிமாற்றங்கள் தடுக்கப்பட்டு இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|
|
|