Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தலை முன்னிறுத்தி தி.மு.க.வினர் எழுப்பி வரும் கோ‌ஷங்கள்

தேர்தலை முன்னிறுத்தி தி.மு.க.வினர் எழுப்பி வரும் கோ‌ஷங்கள்

By: Karunakaran Tue, 22 Dec 2020 3:29:48 PM

தேர்தலை முன்னிறுத்தி தி.மு.க.வினர் எழுப்பி வரும் கோ‌ஷங்கள்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் எழுப்பும் கோ‌ஷங்களுக்கு தனி மரியாதை உண்டு. இந்நிலையில் வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் எழுப்பி வரும் கோ‌ஷங்கள் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நாளை முதல் 10 நாட்கள் ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற கோ‌ஷத்தோடு தீர்மானத்தையும் நிறைவேற்ற கோரி கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளார்கள்.

இந்த யாத்திரை பற்றி மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல 1704 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் காலையில் 500 பேரை சந்திப்பது, மாலையில் பஞ்சாயத்துக்களிலும், நகரப்பகுதியில் வார்டுகளிலும் மக்களை திரள வைத்து ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்று தீர்மானம் போட வைப்பார்கள். மொத்தம் 16 ஆயிரம் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1 கோடி பேரை சந்திக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

slogans,dmk,elections,campaign ,கோஷங்கள், திமுக, தேர்தல், பிரச்சாரம்

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது ‘ஒன்றிணைவோம் வா’ என்ற கோ‌ஷத்தோடு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி மக்களுக்கு உதவும் ஒரு திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள தனி மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 1½ கோடி பேருக்கு தேவையான உதவிகள் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ‘விடியும் வா’ என்ற கோ‌ஷத்தை முன்வைத்தார். இதன்படி ‘விடியலை நோக்கி நானும், நீங்களும் ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுமார் 30 லட்சம் பேருக்கு கடிதங்கள் எழுதினார்.

‘எல்லோரும் நம்முடன்’ என்ற கோ‌ஷத்தை மையமாக வைத்து கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக ‘தமிழகம் மீட்போம்’ என்ற கோ‌ஷத்தோடு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளோடும் தினமும் வீடியோ மூலம் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரசார பயணம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கும் மு.க.ஸ்டாலின் இப்போது ‘மி‌ஷன்-200’ என்ற கோ‌ஷத்தோடு 200 தொகுதிகளை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடர இருக்கிறார்.

Tags :
|