Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கியது... பயணிகள் மகிழ்ச்சி!

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கியது... பயணிகள் மகிழ்ச்சி!

By: Monisha Wed, 11 Nov 2020 3:46:03 PM

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயங்க தொடங்கியது... பயணிகள் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ந் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரம் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 3 ஆயிரத்து 510 பஸ்கள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 510 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து இந்த மூன்று நாட்களுக்கு 5 ஆயிரத்து 247 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 14 ஆயிரத்து 757 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

diwali,special buses,passengers,delight,booking ,தீபாவளி,சிறப்பு பஸ்கள்,பயணிகள்,மகிழ்ச்சி,முன்பதிவு

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 15 முதல் 18-ந் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரம் பஸ்களுடன், 3 ஆயிரத்து 416 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4 ஆயிரத்து 610 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 26 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

டிக்கெட்களை www.tnstc.in., tnstc.official app, www.paytm.com, www.busindia.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. பயணிகள் நலன் கருதி 24 மணி நேரம் செயல்படும் வகையில் 94450-14450, 94450-14436 ஆகிய தொலைபேசி எண்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

Tags :
|