Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுகவை உடைக்க ஸ்டாலினால் முடியாது; முதலமைச்சர் பழனிசாமி உறுதி

அதிமுகவை உடைக்க ஸ்டாலினால் முடியாது; முதலமைச்சர் பழனிசாமி உறுதி

By: Nagaraj Thu, 31 Dec 2020 12:15 PM

அதிமுகவை உடைக்க ஸ்டாலினால் முடியாது; முதலமைச்சர் பழனிசாமி உறுதி

அதிமுகவை உடைக்க முடியாது... திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அதிமுகவை உடைக்க முடியாது. ஒரு தொண்டனைக் கூட தொடமுடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.

மற்ற நாட்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே கருத்து மோதல் அனல் பறக்கும். தற்போது தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் சொல்லவே வேண்டாம். பரப்புரை, அறிக்கை என மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

aiadmk,stalin,a volunteer,can not break ,அதிமுக, ஸ்டாலின், ஒரு தொண்டன், உடைக்க முடியாது

முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக விரைவில் இரண்டாக உடையும் என்றார். இந்நிலையில் அதற்கு பதில் அளித்து பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திருச்சியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், நாட்டுக்காக வாழ்ந்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக என்றும், அதனை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடைக்கப்பார்க்கிறார் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் யாராலும் அதிமுகவை உடைக்க முடியாது, ஸ்டாலினால் ஒரு அதிமுக தொண்டனைக் கூட தொட முடியாது என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|