Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1992-ம் ஆண்டுக்கு பின் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை; அணைகள், குளங்கள் தீவிர கண்காணிப்பு

1992-ம் ஆண்டுக்கு பின் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை; அணைகள், குளங்கள் தீவிர கண்காணிப்பு

By: Monisha Mon, 30 Nov 2020 2:36:52 PM

1992-ம் ஆண்டுக்கு பின் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை; அணைகள், குளங்கள் தீவிர கண்காணிப்பு

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் வருகிற 2-ந்தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்படுகிறது

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி கனமழை பெய்யும் பட்சத்தில் நீர்மட்டம் உயர்ந்து அணைகள் அனைத்து நிரம்பி விட வாய்ப்பு உள்ளது. தென்காசி மாவட்டத்திலும் அனைத்து அணைகளும் நிரம்பி விட்டது. இதனால் அணைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அணை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 2-ந்தேதி முதல் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளதால் 20 செ.மீட்டருக்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

southern district,storm,warning,dams,ponds ,தென் மாவட்டம்,புயல்,எச்சரிக்கை,அணைகள்,குளங்கள்

கடந்த 1992-ம் ஆண்டு தூத்துக்குடி அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெரு வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியாகி, பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது தான் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே தென் மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் குளக்கரைகள், கால்வாய்கள் உடைப்பு ஏற்படாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

தாமிரபரணி ஆற்றில் கடந்த மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதுபோல வருகிற 2-ந்தேதி விடுக்கப்பட்டுள்ள 'ரெட் அலர்ட்'டிலும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாதபடி தண்ணீர் கடலில் கலக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|