Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த வருடம் அறிவித்த இழப்பீடு தொகையை வழங்கக்கோரி எடியூரப்பாவிற்கு எதிராக போராட்டம்

கடந்த வருடம் அறிவித்த இழப்பீடு தொகையை வழங்கக்கோரி எடியூரப்பாவிற்கு எதிராக போராட்டம்

By: Karunakaran Tue, 25 Aug 2020 1:03:10 PM

கடந்த வருடம் அறிவித்த இழப்பீடு தொகையை வழங்கக்கோரி எடியூரப்பாவிற்கு எதிராக போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை காரணமாக குறிப்பிட்ட மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடமும் இதேபோன்று பருவமழை காரணமாக குறிப்பிட்ட மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. அப்போது, மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

முதல்வர் அறிவித்த இழப்பீடு தொகை இன்னும் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் கோபடமடைந்துள்ளனர். தற்போதும் பருவமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான பயிர்கள் சேதமடைந்துள்ளதால், சென்ற வருடம் ஆன இழப்பிற்கே இன்னும் உதவி தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வரும் நிலையில், இது பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

karnataka,edurappa,compensation,farmers ,கர்நாடகா,எடியூரப்பா,இழப்பீடு, விவசாயிகள்

இந்நிலையில் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டு வருகின்றார். அப்போது, விவசாயிகள் கர்நாடக மாநிலத்தின் விமான நிலைய சாலையில் எடியூரப்பாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை காரணமாக பல கடலோர மாவட்டங்கள், மலைப்பகுதி மாவட்டங்கள் பதிப்படைந்துள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :