Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70-வது பிறந்தநாள்: நள்ளிரவு முதலே கொண்டாடும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70-வது பிறந்தநாள்: நள்ளிரவு முதலே கொண்டாடும் ரசிகர்கள்

By: Monisha Sat, 12 Dec 2020 07:52:14 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70-வது பிறந்தநாள்: நள்ளிரவு முதலே கொண்டாடும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு விதங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனால், டுவிட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் நள்ளிரவில் ரசிகர்கள் குவிந்தனர். பலர், நள்ளிரவில் கேக் வெட்டி ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை இன்று மேற்கொள்கின்றனர்.

Tags :