Advertisement

சிட்னி வடக்கு கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிப்பு

By: Nagaraj Mon, 21 Dec 2020 08:38:37 AM

சிட்னி வடக்கு கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிப்பு

ஆஸ்திரேலியா அரசு தடை விதிப்பு... சிட்னி நகரில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்ற அச்சத்தின் எதிரொலியாக, அங்குள்ள வடக்கு கடற்கரை பகுதிகளுக்கு வர வேண்டாம் என மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.

கொத்து கொத்தாக கொரோனா பரவுவதை தடுக்க அடுத்த நான்கைந்து நாட்களுக்கு கட்டுப்பாடு மிகுந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

australian government,curfew,corona spread,restaurants ,ஆஸ்திரேலிய அரசு, ஊரடங்கு, கொரோனா பரவல், உணவகங்கள்

அமெரிக்காவில் உள்ளதை போன்ற கொரோனா வைரசின் வடிவம் பரவுவதால்,சிட்னியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 5 ஆக தொற்று இப்போது 39 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு பகுதிகளில் அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை.

நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சிட்னியின் இதர பகுதிகளிலும் ஊரடங்கை அமல்படுத்தலாமா என ஆஸ்திரேலிய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|