Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்

69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்

By: Nagaraj Fri, 16 Oct 2020 11:55:44 PM

69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்

டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு... 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை நாதன் ருஷ்கின் என்ற கனேடிய சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.

விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் அல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது, இந்த டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தான்.

dinosaur,skeleton,boy,discovery,alberta ,டைனோசர், எலும்புக்கூடு, சிறுவன், கண்டுபிடிப்பு,அல்பெர்ட்டா

டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான அல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம் செல்வதுண்டு.

ஒரு வருடத்துக்கு முன்பு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, சிறு சிறு புதைபடிமங்களைக் கண்டுள்ளனர். இருப்பினும் அது மேலே இருக்கும் பாறைகளிலிருந்து விழுந்திருக்கும் என நாதனின் தந்தை நினைத்துள்ளார்.

எனவே அதை நினைவில் வைத்திருந்த நாதன் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அங்குச் சென்று அதை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளான்.

Tags :
|