Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 5 பேரையும் 2 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 5 பேரையும் 2 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

By: Nagaraj Tue, 14 July 2020 1:18:32 PM

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 5 பேரையும் 2 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

2 நாட்கள் போலீஸ் காவல்... சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 போலீசாரையும் 2 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, போலீசார் 5 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

sathankulam,cbi,thoothukudi,madurai,jayaraj,phoenix ,சாத்தான்குளம், சிபிஐ, தூத்துக்குடி, மதுரை, ஜெயராஜ், பெனிக்ஸ்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, ஐவரும் இன்று மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முகாந்திரம் இருப்பதாகவும், சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டி இருப்பதால், காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களும் சிபிஐ காவலுக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 காவலர்களையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், போலீசாரை எப்படி அழைத்து செல்கிறீர்களோ, அப்படியே மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
|