Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கல்லில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர்

நாமக்கல்லில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர்

By: Monisha Sun, 27 Dec 2020 1:09:15 PM

நாமக்கல்லில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர்

2021-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ம் தேதி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில், 2-வது கட்டமாக மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் இருந்து நாளை மறுதினம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அன்று காலை 8.30 மணிக்கு நாமக்கல் அனுமார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். கோவில் வளாகத்தில் உள்ள வியாபாரிகளை சந்தித்து பேசுகிறார்.

தொடர்ந்து, லாரி மற்றும் கால்நடை தொழில் சார்ந்த பிரதிநிதிகளை சந்திக்கும் அவர், ராசிபுரம் அருந்ததியர் காலனியில் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறார். அன்று மதியம் திருச்செங்கோடு டவுன் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, ஆழ்துளை கிணறு தோண்டும் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

election,campaign,trip,meeting,constituency ,தேர்தல்,பிரச்சாரம்,பயணம்,கூட்டம்,தொகுதி

அன்று பிற்பகல் குமாரபாளையத்தில் மாவட்ட நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாசறைகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். பரமத்திவேலூரில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் அவர் பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று, பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். தொடர்ந்து, நாமக்கல்லில் முதலியார், அருந்ததியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அன்று இரவு நாமக்கல்லிலேயே அவர் தங்குகிறார்.

30-ம் தேதி காலை 9.00 மணிக்கு சேந்தமங்கலத்தில் பழங்குடியினர் மற்றும் மலையாள கவுண்டர் சமூக தலைவர்களை சந்திக்கும் அவர், தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூரில் விவசாய தொழிலாளர்கள், முசிறியில் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழை விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். தொட்டியத்தில் வாழை பயிர்களை பார்வையிட்டு, அதை பயிரிடும் விவசாயிகளின் வீடுகளுக்கு அவர் செல்கிறார். தொடர்ந்து, மணச்சநல்லூரில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஆலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

election,campaign,trip,meeting,constituency ,தேர்தல்,பிரச்சாரம்,பயணம்,கூட்டம்,தொகுதி

தொடர்ந்து, லால்குடி செல்லும் முதலமைச்சர், கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர், உடையார் சமூகத்தினர் அதிகம் உள்ள கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்கிறார். அன்று மாலை 6.00 மணிக்கு திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார். தொடர்ந்து, கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாசறைகள் மற்றும் முன்னணி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். முத்தரையர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். இரவு திருச்சியிலேயே அவர் தங்குகிறார்.

மறுநாள் 31-ம் தேதி காலை 8.00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், அங்குள்ள சந்தையில் வியாபாரிகள், மக்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினரையும், பின்னர், திருவெறும்பூரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் துணை தொழில்களை சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

மதியம் 1.30 மணிக்கு மணப்பாறை செல்லும் முதலமைச்சர், அங்குள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் வீதி வீதியாக சென்று மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து, திருச்சியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், வர்த்தக சபை உறுப்பினர்கள், முக்கிய தொழிலதிபர்கள், வக்கீல்கள் மற்றும் டாக்டர்களை அவர் சந்திக்கிறார். மாலை 6.30 மணிக்கு திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று பேசுகிறார். பின்னர், நத்தர்‌ஷா பள்ளிவாசலுக்கு செல்லும் அவர், அங்கு முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இரவு திருச்சியிலேயே தங்கும் எடப்பாடி பழனிசாமி மறுநாள் சென்னை திரும்புகிறார்.

Tags :
|