Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் போராட்டம்

வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் போராட்டம்

By: Karunakaran Thu, 10 Dec 2020 1:24:39 PM

வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் 15-வது நாளாக இன்று டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது 7 உத்தரவாதங்களை மத்திய அரசு, விவசாயிகளுக்கு அளித்தது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும். விவசாய மண்டிகள் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து நடைபெறும். விவசாய பொருள் வர்த்தகர்களை மாநில அரசு பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும் என்பன உட்பட 7 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

protest,tollgates,country,agricultural laws ,எதிர்ப்பு, டோல்கேட், நாடு, விவசாய சட்டங்கள்

ஆனால் இதையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 3 சட்டங்களையும் வாபஸ் வாங்குவதைத் தவிர வேறு எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். இத்துடன் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக அவர்கள் அறிவித்தார்கள். டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முடக்கப் போவதாக அறிவித்தனர். இதன்படி டெல்லி- ஜெய்ப்பூர் சாலை எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் 12-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் செல்வது என்று அறிவித்துள்ளனர். 14-ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது, பா.ஜனதா எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளை முற்றுகையிடுவது என்றும் அறிவித்து இருக்கிறார்கள். டெல்லியை முற்றிலும் முடக்கப்போவதாக அறிவித்திருப்பதால் டெல்லி நகரில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Tags :