Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக தகவல்

இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக தகவல்

By: Nagaraj Sat, 08 Aug 2020 4:48:10 PM

இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக தகவல்

பனிப்பாறை இடிந்து விழுந்தது... வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

water level,glacier,debris,sea breeze ,நீர்மட்டம், பனிப்பாறை, இடிந்தது, கடல் காற்று

பனி பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது. சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி அடிக்கின் முன் திறந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒரு பகுதியை உடைந்திருக்கலாம் என கனடாவின் பனி மையம் தெரிவித்துள்ளது.

புவிவெப்பமயமாதல் காரணமாக பனி பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், கடல் நீர் மட்டம் அதிகரித்து பேரழிவு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
|