Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவரின் முகக்கவசத்தை அகற்ற முயற்சிக்கும் பச்சிளம் குழந்தை

மருத்துவரின் முகக்கவசத்தை அகற்ற முயற்சிக்கும் பச்சிளம் குழந்தை

By: Nagaraj Fri, 16 Oct 2020 3:21:14 PM

மருத்துவரின் முகக்கவசத்தை அகற்ற முயற்சிக்கும் பச்சிளம் குழந்தை

பச்சிளம் குழந்தை ஒரு மருத்துவரின் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அகற்ற முயற்சிக்கும் புகைப்படம் தற்போது அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நம் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட்டது. இருண்ட, எதிர்மறையான எண்ணங்கள், பதட்டம் மற்றும் பயம் ஆகியவற்றின் வலையில் நம்மைத் தள்ளியுள்ளது. எங்கிருந்தாவது ஏதாவது ஒரு நம்பிக்கை கிடைக்காதா என அனைவருமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

முகக்கவசங்களும் பல வித கட்டுப்பாடுகளும் இல்லாத நம் பழைய வாழ்க்கைக்குச் செல்ல நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த நேரத்தில், அப்படிப்பட்ட நம்பிக்கையை அளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி (Viral) வருகிறது. இது மக்களின் மனங்களைக் கவர்ந்து வருகிறது.

படத்தில், புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தை ஒரு மருத்துவரின் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அகற்ற முயற்சிப்பதைக் காண முடிகிறது. இதை மக்கள் முகக்கவசங்கள் இல்லாத, கொரோனா வைரசிலிருந்து விடுதலைப் பெற்ற உலகின் ஒரு பிரகாசமான அறிகுறியாகப் பார்க்கிறார்கள். பலரும் இப்படத்தை அப்படித்தான் விளக்கியுள்ளார்கள்.

doctor,photo,tattoo baby,mask ,டாக்டர், புகைப்படம், பச்சிளம் குழந்தை, முகக்கவசம்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் சமர் செயிப் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் புதிதாகப் பிறந்த குழந்தை, அவரது சிரிக்கும் முகத்திலிருந்து, அவரது முகக்கவசத்தை (Face Mask) பற்றி இழுப்பதைக் காண முடிகிறது.

"நாம் அனைவரும் விரைவில் முகக்கவசங்களை கழற்றிப்போடப் போகிறோம் என்பதற்கான அடையாளம் நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது" என்று டாக்டர் செயிப் இன்ஸ்டாகிராமில் படத்தைப் பகிர்ந்துகொண்டபோது எழுதியுள்ளார்.

இந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பலர் அதற்கு 'நம்பிக்கையின் சின்னம்' என்று பெயரிட்டுள்ளனர். சிலரோ இது இந்த ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் அதாவது 'Photo of the year 2020' என்று கூறியுள்ளனர்.

Tags :
|
|