Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

By: Nagaraj Sat, 17 Oct 2020 11:45:09 PM

பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

அமைச்சர் ஆலோசனை... தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா்.

மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சில மாநிலங்கள், அக்.15-ஆம் தேதியில் இருந்து பள்ளிகளைத் திறந்துள்ளன. பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றன.

final decision,opening of schools,minister,consultation ,இறுதி முடிவு, பள்ளிகள் திறப்பு, அமைச்சர், ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்தாா்.

எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவ.11-ஆம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் சென்னையில் திங்கள்கிழமை (அக். 19) ஆலோசனை நடத்த உள்ளாா்.

பள்ளிக் கல்வித்துறைச் செயலா், இயக்குநா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனா். இதைத் தொடா்ந்து அடுத்த வாரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :