Advertisement

கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Fri, 19 June 2020 3:45:27 PM

கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் 1 இலட்சத்து 220பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 367 பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona,canada,crossed 1 lakh,hospital ,கனடா, கொரோனா, 1 லட்சத்தை கடந்தது, மருத்துவமனை

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 8,300பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,424பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 62,496பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,990பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|