Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக அதிகரிப்பு

By: Nagaraj Fri, 14 Aug 2020 7:24:56 PM

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக அதிகரிப்பு

2.87 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்களை தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 14 பேர் உள்பட இறப்பு எண்ணிக்கை 6,153 ஆக உயர்ந்துள்ளது.

corona,pakistan,2.87 lakh,increase,impact ,கொரோனா, பாகிஸ்தான், 2.87 லட்சம், அதிகரிப்பு, பாதிப்பு

அதேசமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,65,215 பேர் குணமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 774 பேர் உள்பட தற்போது 15,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 125,289 , பஞ்சாப் - 94,993, கைபர்-பக்துன்க்வா- 35,021, இஸ்லாமாபாத் - 15,342, பலுசிஸ்தான்- 12,062, கில்கித்-பல்திஸ்தான்- 2,426 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுவரை 2,229,409 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

Tags :
|