Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 78.14 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 78.14 லட்சமாக உயர்வு

By: Nagaraj Sat, 24 Oct 2020 2:56:45 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 78.14 லட்சமாக உயர்வு

கொரோனா பாதிப்பு 78 லட்சமாக உயர்வு...இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 78,14,682 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 70,16,046 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,80,680 பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,17,956 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 53,370 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 650 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

corona,experiment,india,vulnerability,number ,கொரோனா, பரிசோதனை, இந்தியா, பாதிப்பு, எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 89.53 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது. மொத்தமாக இதுவரை 10,13,82,564 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நேற்று மட்டும் 12,69,479 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|