Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது

கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Sat, 13 June 2020 09:16:51 AM

கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்தது

குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு... உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 830-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

corona,healed,america,pakistan,victim ,கொரோனா, குணமடைந்தவர்கள், அமெரிக்கா, பாகிஸ்தான், பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது.உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

corona,healed,america,pakistan,victim ,கொரோனா, குணமடைந்தவர்கள், அமெரிக்கா, பாகிஸ்தான், பாதிப்பு

இதேபோல் பாகிஸ்தானில், இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 6,397 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்; 107 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 933 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 2,463 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, பஞ்சாப் மாகாணத்தில், 47ஆயிரத்து, 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.



Tags :
|
|