Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தாண்டு வரும் 21ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதாக தகவல்

இந்தாண்டு வரும் 21ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதாக தகவல்

By: Nagaraj Mon, 06 July 2020 9:40:05 PM

இந்தாண்டு வரும் 21ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதாக தகவல்

வரும் 21ம் தேதி முதல் 2020-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ளது அமர்நாத் குகை. இந்த குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அமர்நாத் யாத்திரை தாமதமாகி போனது. அதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

amarnath temple,panilingam,pilgrimage,india,permission ,அமர்நாத் கோவில், பனிலிங்கம், யாத்திரை, இந்தியா, அனுமதி

இந்நிலையில், வரும் 21ம் தேதி முதல் 2021ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 3ம் தேதி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாதுக்களை தவிர, 55 வயதுக்கு குறைவான யாத்ரீகர்களுக்கு அனுமதி உண்டு. அனைவருக்கும் எல்லையிலேயே கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

வைரஸ் தொற்று இல்லை என்று சான்று இருந்தால் மட்டுமே, குகை கோவிலுக்குள் செல்ல அனுமதி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|