Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துபாயில் மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

துபாயில் மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

By: Karunakaran Sat, 28 Nov 2020 6:35:34 PM

துபாயில் மாற்றுத்திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

துபாயில் வசித்து வரும் அமீரகத்தை சேர்ந்த மூசா ஹுசைன் முராத், மாற்றுத்திறனாளி. இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இவர் தனக்கு நீரில் மூழ்கும் பயிற்சி பெறுவது நீண்ட கால விருப்பமாக உள்ளதாக தனது சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இதனை கேள்விபட்ட துபாய் துறைமுக பகுதி போலீஸ் நிலைய போலீசார், போலீஸ் துறையின் மாற்றுத்திறனாளி கவுன்சில் மற்றும் அஜ்மான் மாற்றுத்திறானிகள் மன்றம் ஆகிய துறைகள் இணைந்து மூசா ஹுசைன் முராத்துக்கு நீரில் மூழ்கும் டைவிங் பயிற்சியை அளிக்க முன் வந்தனர்.

police,transgender,dubai,diving training ,போலீஸ், மாற்றுத்திறனாளி, துபாய், டைவிங் பயிற்சி

இதற்காக பர்முடா டைவிங் நிலையத்தில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவருடன் நீரில் மூழ்கி பயிற்சி அளிக்க தேர்ச்சி பெற்ற 2 நிபுணர்கள் வருகை தந்தனர். இதில் அவருக்கு நீர்மூழ்கும் வீரர்கள் அணியும் பிரத்தியேக கவச உடை மற்றும் உபரகணங்கள் வழங்கப்பட்டது.

இதனை அணிந்துகொண்டு அவரை ஆழமான பயிற்சிக்காக கட்டப்பட்ட ஆழமான நீச்சல் குளத்தின் தண்ணீருக்கடியில் ஆழமான பகுதிக்கு அழைத்து சென்று நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். போலீசாரின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு மூசா ஹுசைன் முராத் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
|
|