Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மேலமடையை சேர்ந்த மாணவி நேத்ராவை கவுரவித்த ஐ.நா. சபை

மதுரை மேலமடையை சேர்ந்த மாணவி நேத்ராவை கவுரவித்த ஐ.நா. சபை

By: Nagaraj Fri, 05 June 2020 5:44:12 PM

மதுரை மேலமடையை சேர்ந்த மாணவி நேத்ராவை கவுரவித்த ஐ.நா. சபை

ஊரடங்கு வேளையில் மக்களின் பசியை போக்கி பாராட்டுக்கள் பெற்ற மதுரையை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா. சபை நியமித்துள்ளது.

மதுரை மேலமடையை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி நேத்ரா.
முடி வெட்டும் தொழில் செய்து வரும் தந்தை மோகன். இவர் மகளுக்காக ரூ. 5 லட்சம் சேர்த்து வைத்திருந்தார். மகளை ஐ.ஏ.எஸ் ஆக்கி பார்க்க வேண்டும் என்பது இவர் கனவு.

ஊரடங்கு காரணமாக தன் ஊரில் ஏழைகள் பலர் பசியால் வாடியதை கண்டு நேத்ரா மிகுந்த வேதனையடைந்தார். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று உறுதி கொண்டார். இதற்காக தந்தையிடம் அடம்பிடித்தார்.

netra,un,honor,call,madurai ,நேத்ரா, ஐ.நா., கவுரவம், அழைப்பு, மதுரை

மகளின் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டு படிப்புக்காக
சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் ரூபாயில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அப்பகுதி மக்களின் பசியை போக்க செய்தார். மன் கீ பாத் நிகழ்ச்சியில்
பேசிய பிரதமர் மோடி மோகனின் சேவையை பாராட்டினார்.

இந்நிலையில் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக
ஐ.நா. சபை நியமித்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியுள்ளது. மேலும் வறுமை ஒழிப்பு தொடர்பாக, ஐ.நா மாநாட்டில் பேசுவதற்கு நேத்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது மதுரைக்கே கிடைத்த பெருமையாக மக்கள் நேத்ராவை பாராட்டி வருகின்றனர்.

Tags :
|
|
|
|