Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிவு

By: Monisha Sat, 29 Aug 2020 3:06:49 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிவு

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 92.81 அடியாக சரிவடைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 513 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 36 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதுபோக கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

mettur dam,water level,delta irrigation,canal ,மேட்டூர் அணை,நீர்மட்டம், டெல்டா பாசனம்,கால்வாய்

கடந்த 26-ந் தேதி 95.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 94.92 அடியானது. நேற்று நீர்மட்டம் மேலும் சரிந்து 93.89 அடியானது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 93.89 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 92.81 அடியானது.

Tags :