Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு முடிவு வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடிகளும் நடக்கவில்லை

நீட் தேர்வு முடிவு வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடிகளும் நடக்கவில்லை

By: Nagaraj Sat, 17 Oct 2020 4:57:19 PM

நீட் தேர்வு முடிவு வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடிகளும் நடக்கவில்லை

நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் 13 மற்றும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில் 13.66 லட்சம் மாணவர்கள் பங்கற்றனர். அதில், தமிழகத்தில் மட்டும 99 ஆயிரத்து 610 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அக்டோபர் 16-ம் தேதி அன்று வெளியிட்டது. அதில், 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. ஆனால், இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி உள்ளதாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

mess,no,minister,description,government of tamil nadu ,
குளறுபடிகள், இல்லை, அமைச்சர், விளக்கம், தமிழக அரசு

குறிப்பாக, தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் றெக்கை கட்டி பறந்தன.

இந்த நிலையில், புதுக்கோட்டையில், அதிமுகவின் 49 -ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் மேள, தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து பேரணியாகச் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் விஜயபாஸ்கர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது. அதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரியை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான், அதனால் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்.

மேலும், நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை. ஓபிசி க்கு 50 சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags :
|
|