Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் இனி இரண்டு கொடிகள் என்ற நிலை ஏற்படாது - ரவிசங்கர் பிரசாத்

நாட்டில் இனி இரண்டு கொடிகள் என்ற நிலை ஏற்படாது - ரவிசங்கர் பிரசாத்

By: Karunakaran Mon, 26 Oct 2020 5:41:10 PM

நாட்டில் இனி இரண்டு கொடிகள் என்ற நிலை ஏற்படாது - ரவிசங்கர் பிரசாத்

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கடந்த 23-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, மேஜையில் இருந்த ஜம்மு காஷ்மீர் கொடியை காட்டி இது தான் எனது கொடி. இந்த கொடி (ஜம்முகாஷ்மீர் கொடி) மீண்டும் எப்போது வருகிறதோ அப்போது தான் நாங்கள் அந்த கொடியை ஏற்றுவோம் (இந்திய தேசியக்கொடி).. எங்களுக்கு சொந்தமான கொடியை மீண்டும் கொண்டுவரும் வரை நாங்கள் வேறு எந்த கொடியையும் ஏற்றமாட்டோம் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த கொடிதான் ( ஜம்மு காஷ்மீர் கொடி) அந்த கொடியுடனான (இந்திய தேசிய கொடி) எங்கள் இணைப்பை உருவாக்கியது. இந்த கொடி (ஜம்மு காஷ்மீர் கொடி) எப்போது எங்கள் கைகளுக்குள் வருகிறதோ அப்போதுதான் நாங்கள் அந்த கொடியை (இந்திய தேசிய கொடி) ஏற்றுவோம் என்றார். இதனால் அவரது கருத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

kashmir,two flags,india,ravi shankar prasad ,காஷ்மீர், இரண்டு கொடிகள், இந்தியா, ரவிசங்கர் பிரசாத்

இந்நிலையில், பீகார் மாநிலம் அவ்ரங்காபாத் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும்பணிகள் தொடங்கிவிட்டது. இதில் சிலருக்கு பிரச்சனை உள்ளது. அவர்களுக்கு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 நீக்கப்பட்டதிலும் பிரச்சனை உள்ளது. நான் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கிறேன். ஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இந்திய மூவர்ணக்கொடிதான் அனைத்து பகுதிகளும் இருக்க வேண்டும். நமது பிரதமர் கூறியது என்ன? கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு தக்கபதிலடி கொடுத்தது ராணுவத்தின் பீகார் பிரிவினர் தான். உரி தாக்குதலின்போதும் பீகார் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் இருந்தனர். பீகார் வீரமிக்க நெஞ்சங்களின் நிலப்பரப்பு என்று கூறினார்.

Tags :
|