Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 62 ஆண்டுகளில் இதுவே முதல்முறை; ஆன்லைனில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த ஐ.ஐ.டி., முடிவு

62 ஆண்டுகளில் இதுவே முதல்முறை; ஆன்லைனில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த ஐ.ஐ.டி., முடிவு

By: Nagaraj Thu, 25 June 2020 8:59:15 PM

62 ஆண்டுகளில் இதுவே முதல்முறை; ஆன்லைனில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த ஐ.ஐ.டி., முடிவு

ஆன்லைனில் செமஸ்டர் வகுப்புகள்... மும்பை ஐ.ஐ.டி. ஆன்லைன் மூலம் செமஸ்டர் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது. 62 ஆண்டு கால ஐ.ஐ.டி. வரலாற்றில் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து மும்பை ஐ.ஐ.டி. இயக்குனர் சுபாஷிஹ் சவுத்ரி கூறியது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்விமுறையில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். விரிவான ஆலோசனைக்கு பின் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த செமஸ்டர் வகுப்புகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அடுத்த கல்வி ஆண்டு தாமதமின்றி துவங்குவது உறுதிப்படுத்தப்படும்.

iit,end,donate,support,online ,
ஐ.ஐ.டி, முடிவு, நன்கொடை, ஆதரவளியுங்கள், ஆன்லைன்

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான தகவல்கள் மாணவர்களிடம் அடுத்த சில நாட்களில் பகிர்ந்து கொள்ளப்படும். பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளிலிருந்து வருவதால் அவர்களிடம் ஆன்லைன் வழி படிப்புக்கு தேவைப்படும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இருக்க வாய்ப்பில்லை.

ஆகையால் அவர்களுக்கு அந்த வசதிகள் கிடைக்க தற்போது உதவி தேவைப்படுகிறது. நன்கொடை வழங்க விரும்புவோர் முன்வரலாம். அவர்கள் வகுப்புகள் தொடர ஆதரவளியுங்கள். இவ்வாறு அவர் கூறினார். மும்பை ஐ.ஐ.டி.யின் முடிவை பின்பற்றி மற்ற ஐ.ஐ.டி.களும் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|
|