Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பேச்சு வார்த்தை

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பேச்சு வார்த்தை

By: Nagaraj Tue, 08 Dec 2020 10:22:54 PM

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பேச்சு வார்த்தை

மத்தியஅமைச்சர் பேச்சுவார்த்தை... வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில், தொடர்ந்து, 12வது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

speech,representatives of agricultural associations,struggle,union minister ,பேச்சு வார்த்தை, விவசாய சங்க பிரதிநிதிகள், போராட்டம், மத்திய அமைச்சர்

பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியுள்ளது. நாளை ( டிச. 09) மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான, மூன்று அமைச்சர்கள் குழு, நாளை ஆறாவது சுற்று பேச்சு நடத்த உள்ளது.

இந்நிலையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Tags :
|