Advertisement

10 கோடி தடுப்பூசி மருந்தை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

By: Nagaraj Sat, 12 Dec 2020 10:31:30 PM

10 கோடி தடுப்பூசி மருந்தை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

கூடுதல் தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம்... மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ்கள் (10 கோடி) தடுப்பூசி மருந்தை வாங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1.65 பில்லியன் டொலர் மதிப்பிலான தடுப்பூசி மருந்துகள் அமெரிக்காவுக்கு விநியோகம் செய்யப்படும் என மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூன் மாத இறுதிக்குள் தொடர்ந்து தடுப்பூசி மருந்தை வழங்கும் என்று அமெரிக்க அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி ஃபைசர் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

usa,number,vaccine,supplements,approved ,அமெரிக்கா, எண்ணிக்கை, தடுப்பூசி, கூடுதல், ஒப்புதல்

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு கோடியே 58இலட்சத்து 20ஆயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 46ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, மூவாயிரத்து 19பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

தற்போது வரை வைரஸ் தொற்றினால் 64இலட்சத்து 85ஆயிரத்து 289பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 27ஆயிரத்து 324பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Tags :
|
|